×

இபிஎப் தொகை விண்ணப்பம் நிராகரிப்பு 10 ஆண்டு கால பாஜ ஆட்சி- அநியாய காலம்: காங். சாடல்

புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து இறுதி தொகையை பெறுவதற்கான விண்ணப்பங்களில் மூன்றில் ஒரு பங்கு நிராகரிக்கப்படுகின்றது. இதன் காரணமாக தங்களது கணக்கில் உள்ள தொகையை ஓய்வு காலத்தில் எடுக்க முடியாமல் லட்சக்கணக்கானோர் சிரமம் அடைந்துள்ளனர். இது குறித்து பாஜ அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) இறுதி தொகை எடுப்பதற்கான விண்ணப்பங்கள் நிராகரிப்பு கடந்த 2017-2018ம் ஆண்டு 13 சதவீதமாக இருந்தது.

இது 2022-2023ம் ஆண்டில் 34சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டு கால அநியாய காலத்தின் அம்சம் என்னவென்றால் எந்த சமூகமும் அதன் முழு உரிமையை பெற முடியாது. வேலை சந்தையில் இருந்து பெண்கள் வெளியேறுகிறார்கள். இளைஞர்களால் வேலை தேட முடியவில்லை. விவசாயிகளுக்கு போதிய விலையை பெற முடியவில்லை. ஒவ்வொரு நிராகரிப்பும், உழைக்கும் குடும்பங்களின் முகத்தில் அறைவதாக உள்ளது. அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் வேதனையை ஏற்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post இபிஎப் தொகை விண்ணப்பம் நிராகரிப்பு 10 ஆண்டு கால பாஜ ஆட்சி- அநியாய காலம்: காங். சாடல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Sadal ,NEW DELHI ,Chatal ,Dinakaran ,
× RELATED டெல்லி பாஜ அலுவலகத்தில் தீ